FASTag-இல் வந்த அதிரடி மாற்றம்..!! புதிய வங்கியில் பெற அரசு திடீர் உத்தரவு..!!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து FASTags வாங்குமாறு மக்களை வலியுறுத்தும் வகையில், புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதோடு லிஸ்டில் இருந்து Paytm இன் பெயர் நீக்கப்பட்டுள்ளது. NHAI மொத்தமாக 32 வங்கிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு பயணிகள் வாகனங்களுக்கு FASTags வாங்கலாம். Paytm FASTagsஐ பெற்றவர்கள் NH நெட்வொர்க்கில் தொந்தரவு இல்லாத பயணத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து புதிய FASTagsயை வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், உங்களிடம் பாஸ்ட்டேக் உள்ள நிலையில், அதில் 2 முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது. இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும். இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத FASTags களை செயலிழக்க வைக்க முடிவு செய்துள்ளது. இவை ஜனவரி 31, 2024 க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு இனிமேல் ஒரு FasTagகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது. இப்படி பயன்படுத்தப்படும் பழைய பாஸ்ட் டாக்குகள் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு செயலிழக்கச் செய்யப்படும். இன்னொரு பக்கம் பேடிஎம் மூலம் பலரும் பாஸ்ட் டாக் வாங்கியுள்ளனர். ஆனால், பேடிஎம் தற்போது ஆர்பிஐ மூலம் பிளாக் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 29ஆம் தேதி வரை மட்டுமே இதற்கு டைம். அதோடு பேடிஎம் யுபிஐ சேவையும் கூட செயல்படாமல் போகும். இதனால் பேடிஎம் மூலம் பலரும் பாஸ்ட் டாக் சேவையை பயன்படுத்தும் நபர்கள் அதன் வாலட் பணத்தை ரீபண்ட் பெற்றுவிட்டு, புதிதாக பாஸ்ட் டாக் பெறுவது சரியாக இருக்கும்.
எப்படி அப்டேட் செய்வது..?
* வங்கியுடன் இணைக்கப்பட்ட FASTag இணையதளத்தைப் பார்வையிடவும்.
* தேவையான பக்கத்தை அணுக, 'FASTag' என்ற சொல்லை கூகுள் செய்யலாம்.
* உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து பெறப்பட்ட OTPஐ உள்ளிட வேண்டும். அங்கே உள்ள "எனது சுயவிவரம்" என்ற பகுதிக்குச் சென்று KYC-யை கிளிக் செய்யவும்.
* அதில், முகவரிச் சான்று மற்றும் மற்ற விவரங்கள் உள்ளிட்ட தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு அப்டேட் கொடுக்கவும்.
* அந்த பகுதியில் நீங்கள் அப்டேட் செய்த KYC காட்டப்படும்.
FAStag KYC ஐ முடிக்க தேவையான ஆவணங்கள் :
* வாகனத்தின் பதிவு சான்றிதழ்
* அடையாளச் சான்று
* முகவரி ஆதாரம்
* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
* பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டு ஆகியவை அடையாள மற்றும் முகவரிச் சான்றாகப் பயன்படுத்தப்படலாம்.