10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்..!! விருப்பப் பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம்..!!
விருப்பப் பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண்னை நிர்ணயித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழை தாய்மொழியாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே போதும். தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
அந்த வகையில், விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. மொழி சிறுபான்மை பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியலுடன் விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட விருப்பப் பாடங்களில் பெறும் மதிப்பெண்களும் சான்றிதழில் அச்சிட்டு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.