முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆதார் கார்டில் வரப்போகும் அதிரடி மாற்றம்..!! இனி இவர்களுக்கு எல்லாம் கிடையாது..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

As Aadhaar card becomes mandatory for citizens across India, some new procedures will come into force.
07:41 AM Oct 14, 2024 IST | Chella
Advertisement

இந்தியா முழுவதும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை அவசியமானதாக உள்ள நிலையில், சில புதிய நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டைகள் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா சேவைகளுக்கு அவசியமாகிறது. தேவையான சான்றுகளை சமர்பித்து ஆதார் மையங்கள் மூலம் ஆதாரை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், சமீபமாக தமிழ்நாட்டில், வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு எவ்வித ஆவணங்களும் இன்றி ஆதார் கொடுப்பதாக, திருப்பூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் இதுபோல போலி சான்றுகள் மூலம் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள் பலரும் ஆதார் கார்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பிக்க புதிய நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்தால், அவை ஆன்லைன் மூலம் UIDAI ஒருங்கிணைந்த மையத்திற்கு செல்லும். அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஆதார் அட்டை வழங்கப்படும்.

சான்றுகளில் சந்தேகம் இருக்கும்பட்சத்தில் அவை அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தாசில்தார் தலைமையில் ஆர்.ஐ மற்றும் வி.ஏ.ஓ. உண்மை தன்மையை நேரடியாக ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்னரே ஆதார் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை மூலம் வெளிநாட்டு அகதிகள், சட்டவிரோதமாக உள் நுழைபவர்கள் ஆதார் பெறுவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 50 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் பேய் மழை..!! பாலைவனத்தில் நடந்த பயங்கரம்..!! இது ஆச்சரியம் அல்ல எச்சரிக்கை..!!

Tags :
ஆதார் அட்டைதமிழ்நாடுபுதிய மாற்றம்மத்திய அரசு
Advertisement
Next Article