பிளிப்கார்ட், அமேசானுக்கு அதிரடி தடை!… இனி இந்த வார்த்தையை பயன்படுத்த கூடாது!… மத்திய அரசு!
FSSAI: ஆன்லைனில் பொருட்களை வாங்குவது தற்காலத்தில் சாதாரணமான செயலாகி வருகிறது. கடைவீதிக்குச் சென்று ஆராய்ந்து துணி, பொருட்களை வாங்குவதற்குப் பதில் வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைனில் வாங்குவது எளிமையாகிவிட்டது. உள்ளங்கைக்குள் அடங்கும் ஒரு ஸ்மார்ட் போனில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற செயலிகள் மூலம் பொருட்களை இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் பெற முடிகிறது.
ஆன்லைனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்களை வைத்துள்ளனர். மேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் எளிமையான முறையில் பொருட்களை வாங்கிகொள்ளலாம். இந்தநிலையில், பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டஇ-காமர்ஸ் நிறுவனங்கள் சில பானங்களின் வகைகளுக்கு துல்லியமான லேபிளிங் வார்த்தையை பயன்படுத்த வலியுறுத்தும் உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) பிறப்பித்துள்ளது.
அதன்படி, பால், தானியங்கள்அல்லது மால்ட் அடிப்படையிலான பானங்களுக்கு ஆரோக்கிய பானங்கள் (ஹெல்த் டிரிங்க்) அல்லது ஆற்றல் பானங்கள் (எனர்ஜி டிரிங்க்) என்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. நாட்டின் உணவு சட்டங்களுக்குள் ஆரோக்கிய பானம் என்ற வார்த்தைக்கான தெளிவான வரையறை இல்லாததன் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அதேபோன்று, “எனர்ஜி டிரிங்க் என்பது ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின்படி கார்பனேற்றம் மற்றும் கார்பனேற்றம் செய்யப் படாத நீர் சார்ந்த சுவை கொண்டபானங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, தவறான வார்த்தைகள் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் என்பதை உணர்ந்து எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த உத்தரவை இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பிறப்பித்துள்ளது. 2006 உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், உணவுத் தொழிலை நிர்வகிக்கும் தொடர் புடைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்குள் ஹெல்த்டிரிங்க் என்ற சொல் தரநிலைப் படுத்தப்படவில்லை. மறுபுறம் எனர்ஜி டிரிங்க் குறிப்பிட்ட அளவுகோல்களுக்குள் வரும் தயாரிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் ஆற்றல் பானங்களின் நுகர்வு குறிப்பாக இளைஞர்களிடையே இதுபோன்ற பானங்களின் அதிகப்படியான நுகர்வு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. அதன் காரணமாகவே இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த உணவு பாதுகாப்பு அமைப்பு தற்போது தடைவிதித்துள்ளது.