For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாளை வாக்குப்பதிவு..! உங்களுக்கு லீவு கிடைக்கவில்லையா..! உடனே இதை பண்ணுங்க..!

05:40 AM Apr 18, 2024 IST | Baskar
நாளை வாக்குப்பதிவு    உங்களுக்கு லீவு கிடைக்கவில்லையா    உடனே இதை பண்ணுங்க
Advertisement

ஏப்ரல் 19ஆம் தேதி ஓட்டு போட லீவு கொடுக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது 1950 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க, சென்னையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என்றும்
சென்னை தொழிலாளர் இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டம் முழுமைக்கும் 044-24330354 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வடசென்னையில் உள்ளோர் தொழிலாளர் துணை ஆய்வாளர் சி.விஜயலட்சுமியை 9840829835 என்ற எண்ணிலும், தென் சென்னையில் உள்ளோர் தொழிலாளர் துணை ஆய்வாளர் இ.ஏகாம்பரத்தை 9790930846 என்ற எண்ணிலும், மத்திய சென்னையில் உள்ளோர் தொழிலாளர் துணை ஆய்வாளர் வேதநாயகியை 9884264814 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை, தொழில், வர்த்தகம், உணவு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் போக்குவரத்து, பீடி, சுருட்டு மற்றும் தோட்ட நிறுவனங்கள், அனைத்து கடைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

அதே நேரம் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை வழங்கப்பட வேண்டும். அந்த விடுமுறை நாளுக்கான ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கு ஏற்ப அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

இவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள், தொழிலாளர்கள் புகார் அளிக்க தொழிலாளர் நலத்துறை சார்பில் மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாநில ஒருங்கிணைப்பாளரான தொழிலாளர் இணை ஆணையர் விமலநாதன் (9445398801, 044-24335107),தொழிலாளர் உதவி ஆணையர்களான வெங்கடாச்சலபதி - சென்னை முதல் வட்டம் (7010275131, 044-24330354), சுபாஷ் சந்திரன் - இரண்டாம் வட்டம் (8220613777, 044-24322749), சிவக்குமார் - மூன்றாம் வட்டம் (9043555123, 044-24322750) ஆகியோரைதொடர்பு கொண்டுபுகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement