அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்தனை பேர் பணி நீக்கமா.. ஐடி நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்?
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற முக்கிய நிறுவனங்கள் பணிநீக்கங்களை தொடரும் நிலையில், நடப்பாண்டின் முதல் பாதியில் உலகளவில் 333 தொழில்நுட்ப நிறுவனங்களால் சுமார் 98,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் பணிநீக்கங்களும் இதில் அடக்கம். Layoff.ly வெளியிட்ட அறிக்கையின்படி 2022ஆம் ஆண்டை விட, 2023ஆம் ஆண்டில் சுமார் 59% பணி நீக்கங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தின் அறிமுகத்திற்கு பின்னர் முன்னணி நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை பணிநீக்கம் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டு அக்டோபர் மாதம் மட்டும் 3,080 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐடி துறை பணிநீக்கம் : கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 2,62,915 ஊழியர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. பொருளாதார வீழ்ச்சி, நிதி சார்ந்த மூலோபாய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் பணிநீக்கங்கள் தீவிரமாக இருந்தன. பல மாதங்களாக தொழில்நுட்பத் துறையில் இந்த நிலை நீடித்து வரும்நிலையில், 2024-ல் ஆட்குறைப்பு நடவடிக்கை குறைந்தபாடில்லை.
அதிலும் அக்டோபர் மாதம் 30 நிறுவனங்களில் 3,080 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் 35 நிறுவனங்களில் 3,941 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தை காட்டிலும் சற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத பணிநீக்கம் : அமெரிக்காவை தலைமையாக கொண்டு இயங்கும் Dropbox என்ற நிறுவனம் 527 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. cryptocurrency நிறுவனமான Kraken 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது அந்தந்த நிறுவனங்களின் தலா 20 மற்றும் 15 சதவீத ஊழியர்கள் ஆகும். இந்த நிலையில், உலகளவில் புகழ்பெற்ற TikTok நிறுவனத்தில் சுமார் 100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் மலேசியா நாட்டில்தான் அதிகபடியான ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். ஏஐ பயன்பாட்டினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணிநீக்கம் நடவடிக்கைக்கு காரணம் என்ன? பணிநீக்கம் நடவடிக்கைக்கு தானியங்கி இயந்திரங்கள், மென்பொருட்கள் பங்கெடுப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் நிர்வாக செலவுகளை குறைக்கும் எண்ணத்திலும், உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும் ஏஐ தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் ஏற்றுகொள்ள தொடங்கியுள்ளன.
பெரும்பாலும் நிறுவனத்திற்குள் ஒரு புதிய பொசிஷனை கண்டறிய ஊழியர்களுக்கு 30 நாள் கால அவகாசம் வழங்குவதை அமைதியான பணிநீக்கங்கள் உள்ளடக்கி இருக்கிறது. இந்த 30 நாட்களுக்குள் அதே நிறுவனத்திற்குள் தனக்கு பொருத்தமான வேறொரு பொசிஷனை குறிப்பிட்ட ஊழியர் கண்டறியாவிட்டால் அவர் வேலையை விட்டு டெர்மினேட் செய்யப்படுவார். அதேபோல NITES)-ன் மற்றொரு அறிக்கையின்படி, முன்னணி இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் இருந்து நடப்பாண்டில் முதல் ஐந்து மாதங்களில் சுமார் 2,000 மற்றும் 3,000 ஊழியர்கள் மேற்கூறியதை போல அமைதியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Silent layoffs முறையில் பொதுவாக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு நோட்டீஸ் பீரியடை வழங்குகின்றன, இது அவர்களுக்கு மாறுவதற்கு நேரத்தை வழங்குகிறது. மறுபுறம் Quiet firing-ல் நிறுவனங்கள் தங்கள் பணியாளரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்துகின்றன. எந்த முறையாயினும் ஊழியர்களுக்கு மன அழுத்தம் மற்றும் வேலை பாதுகாப்பின்மை ஏற்பட வழிவகுக்கிறது. அதேபோல் அனுபவம் வாய்ந்த மற்றும் அதிக ஊதியம் பெறும் பணியாளர்கள் குறிப்பாக அமைதியான பணிநீக்கங்களில் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க இவர்களை வேலையை விட்டு நீக்குவதை இலக்காக கொண்டுள்ளன.
Read more ; ”2026இல் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி”..!! ”திமுகவின் குடும்ப ஆட்சி அகற்றப்படும்”..!! தவெக அதிரடி..!!