’நியாயப்படி ரஜினியை தான் என்கவுண்டரில் போடணும்’..!! வேட்டையனை வெச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையால சினிமாவின் நடிப்பு அரக்கன் ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் குறித்து பல்வேறு விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பலராலும் கவனிக்கப்படும் ப்ளூ சட்டை மாறன், வேட்டையன் படத்திற்கு தனது விமர்சனத்தை கூறியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், ”கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக இருக்கும் ரஜினி, சமூக விரோதிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித்தரும் பழக்கம் இல்லை. அவர்களைப் பார்த்தாலே நாயைச் சுடுவதுபோல் என்கவுன்டரில் சுட்டுத்தள்ளுவதுதான் பழக்கம்.
இன்னொரு பக்கம் அமிதாப் பச்சனை காட்டுகின்றனர். அவர் மனித உரிமைகள் ஆணையத்தில் இருக்கிறார். அவர் இந்த என்கவுன்டருக்கு முற்றிலும் எதிரானவர். அதேபோல், ஒரு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகின்றார் துஷாரா விஜயன். அவர் மிகவும் பொறுப்பான ஆசிரியை என்பதால் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.
அந்த ஊரில் கஞ்சா கடத்தும் கும்பல் உள்ளது. அது துஷாராவின் கண்களில் பட்டவுடன், ரஜினிகாந்த்திற்கு கடிதம் எழுதுகிறார். இதனால் அந்த கஞ்சா கடத்தும் கும்பலை தலைவர் என்கவுன்டரில் போட்டுத்தள்ளி விடுகிறார். பின்னர் துஷாரா அங்கிருந்து டிரான்ஃஸ்பர் வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்து விடுகின்றார். இங்கேயும் மிகவும் பொறுப்பான டீச்சராக உள்ளார். ஒருநாள் திடீரென துஷாரா விஜயன் மர்மமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க, தலைவர்தான் சரியான ஆள் என அவரை வரச்சொல்லுகின்றனர்.
குற்றவாளியை எங்கிருந்தாலும் தேடிக் கொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் சென்ற தலைவருக்கு, அவர் நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்றாக மாறிவிடுகின்றது. இதனால் தலைவர் வருத்தப்படுகிறார். அந்த இடத்தில் இடைவேளைக் காட்சி வைக்கிறார்கள். இடைவேளை வரை கூட படம் நேர்கோட்டில் போய்க்கொண்டு உள்ளது. இடைவேளைக் காட்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது. படத்தின் இரண்டாம் பாதியைப் பொறுத்தவரை கதையில் இதுதான் நடக்கப்போகின்றது என்பதை நம்மால் சர்வசாதாரணமாக யூகிக்க முடிகின்றது.
இந்தப் படம் கதையாகவே சில உறுத்தல்கள் இருக்கிறது. குறிப்பாக தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை என்கவுன்டரில் போட்டுவிடவேண்டும் என்ற கொள்கை கொண்டவர் ரஜினி. கதைப்படி ரஜினிகாந்த்தே ஒரு கொலைகாரன்தான். நியாயப்படி பார்த்தால், அவரையே இன்னொரு நல்ல அதிகாரியை வைத்து என்கவுன்டரில் போடனும். அதைச்செய்யாமல் விட்டுவிட்டார்கள். கொலை செய்த ரஜினிகாந்த் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கின்றார். அதையும் அமிதாப் பச்சன் அமர்ந்து பார்க்கின்றார். அதேபோல், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசிலும் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்க வேண்டுமா என யோசிக்க வைக்கின்றது" என விமர்சித்துள்ளார்.
Read More : 14 வயது சிறுமி பலமுறை பலாத்காரம்..!! ரூ.100 கொடுத்து விஷயத்தை மறைத்த அதிர்ச்சி சம்பவம்..!!