காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா நீங்கள்..!! கட்டாயம் இத படிங்க..
காலையில் வெறும் வயில் பால் குடிப்பதால், உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்கரிப்பதோடு, தெளிவான சருமத்திற்கு பயனளிக்காது என்றும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
பால் என்பது முதல் ஊட்டச்சத்தின் இன்றியமையாத பகுதியாக உள்ளது. இருப்பினும், நம்மில் பலர் பாலுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். தினமும் காலையில் பால் குடிப்பதால் புத்துணர்ச்சி உள்ளிட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நிபுணர்கள் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.பால் உட்கொள்வதை விட, உங்கள் காலைப்பொழுதை லேசாக உணவுகளை உட்கொண்டு தொடங்குவது நல்லது. வெறும் வயிற்றில் பால் குடிப்பது நல்லதை விட தீங்கு விளைவிக்கும். மேலும் இது உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது மற்றும் தெளிவான சருமத்திற்கு பயனளிக்காது எனக் கூறப்படுகிறது.
செரிமான அமைப்பில் ஒரு கனமான பணியைச் செயல்படுத்துவது நல்ல யோசனையல்ல, ஏனெனில் கனமான உணவை ஜீரணிக்க நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் வயிற்று வலி ஏற்படக்கூடும். வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் இரைப்பை பிரச்சனைகள், அமிலத்தன்மை, வீக்கம், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆயுர்வேதத்தின் படி, பால் குடிக்க சிறந்த நேரம் மாலை ஆகும். ஏனெனில் நீங்கள் ஓய்வெடுக்கும்போது, உங்கள் உடலைப் புத்துணர்ச்சியடையச் செய்ய இது உதவுகிறது. காலை வேளையில் பால் குடிப்பதால் உடல் எடை கூடும் என்றும், மாலையில் குடிப்பதால் தூக்கம் மற்றும் நரம்பு தளர்வு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
Read more ; வாரம் இரண்டு முறை மட்டும் வீட்டில் இப்படி பண்ணி பாருங்க..!! பண மழை கொட்டும்..!!