முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’எனது கையெழுத்து இல்லாத மனுவை ஏற்பது சட்ட விரோதம்’..!! எடப்பாடிக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ்..!!

05:57 PM Mar 29, 2024 IST | Chella
Advertisement

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், மீண்டும் ஒரு மனு அளித்துள்ளார்.

Advertisement

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.

மேலும், தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாவிட்டால், அந்த சின்னத்தை முடக்குமாறும் ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், மீண்டும் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimen தான் ஏற்கனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து இல்லாத மனுவை ஏற்பது சட்ட விரோதம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : Rain | கொளுத்தும் வெயிலுக்கு நடுவே குளு குளு நியூஸை சொன்ன வானிலை மையம்..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!

Advertisement
Next Article