முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வேகமெடுக்கும் கொரோனா பரவல்..!! மக்களே அசால்ட்டா இருக்காதீங்க..!! அப்பறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க..!!

04:09 PM Dec 22, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சீனாவில் 2019ஆம் ஆண்டு தோன்றி 2 ஆண்டுகளுக்கு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று வைரஸ், அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து அச்சம் காட்டி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாட்டில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளது. இதில் 80% பாதிப்பு கேரளாவில் பதிவாகி உள்ளது.

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 265 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,606 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிந்துள்ளார். டெல்லி அடுத்த நொய்டாவில் பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள, மக்கள் அடர்த்தி மிகுந்த நொய்டாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Tags :
கேரள மாநிலம்கொரோனா பரவல்சீனாதமிழ்நாடு
Advertisement
Next Article