”சர்வாதிகார ஆட்சி ஒழிக”..!! மக்களவைக்குள் திடீரென குதித்த மர்ம நபர்கள்..!! புகை மூட்டத்தால் பரபரப்பு..!!
நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பில் மிகப்பெரிய குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்த 9 பயங்கரவாதிகள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டபோது, பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் அவற்றை முறியடித்தனர். இருப்பினும், பயங்கரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் இடையிலான தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதில் 14 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் அதே நாளில், நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறிய நபர்கள் நுழைந்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து வந்தவர்கள், நாடாளுமன்ற சபைக்குள் தாவி குதித்ததால், அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். அத்துமீறி நுழைந்த இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் சர்வாதிகார ஆட்சி ஒழிக என்ற கோஷமிட்டனர். இருவரிடமிருந்தும் கலர் பாம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். பழைய நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு நாளன்று இச்சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.