ஆன்டிபயாடிக் மருந்துகளை திரும்ப பெறும் அபோட் இந்தியா..!!
அபோட் இந்தியா மருத்து தயாரிப்பு நிறுவனம் ஆன்டிபயாடிக் மருந்துகளின் சில பிரிவுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட், தாமாகவே முன்வந்து, பெனிசிலின் மருந்தான பென்டிட்ஸ் 800, பென்டிட்ஸ் 400, பென்டிட்ஸ் 200 ஆகிய மாத்திரைகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருக்கிறது இந்த தொகுதிகள் புதிதாக பட்டியலிடப்பட்ட ஒப்பந்த உற்பத்தியாளரான Akums Drugs & Pharmaceuticals Ltd ஆல் தயாரிக்கப்பட்டது.
சுவாசக்குழாய், தொண்டை, நுரையீரல், மூக்கு, தோல் மற்றும் சிபிலிஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பென்டிட்கள் பரவலாக பரிந்துரைக்கப்படுகின்றன. மாத்திரை வில்லைகள் இருக்கும் அட்டைகளில் காற்று அதிகம் நிரம்பி சற்று வீங்கியது போல இருப்பதாகக் குற்றச்சாட்டு வந்ததைத் தொடர்ந்து, அவற்றை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதை நிறுத்துமாறு அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அபோட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ எங்களுடைய ஆண்டிபயாடிக் மருந்துகளில் ஒன்றான பென்டிட்ஸ் மாத்திரைகளை நாங்கள் திரும்ப பெற்றுள்ளோம். உற்பத்தியாளர்கள் நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, மருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உடல்நலக் கவலைகள் இல்லை
இந்தச் சிக்கல் தொடர்பான உடல்நலக் கவலைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், திரும்பப்பெறுதல் மற்ற அபோட் தயாரிப்புகளை பாதிக்காது என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியது. பென்டிட்களுக்கு மாற்று மருந்துகள் நோயாளிகளுக்கு கிடைக்கின்றன.
அபோட் அதன் பங்காளிகள் பாதிக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை மறுபரிசீலனை செய்யுமாறும், திரும்பப்பெறப்பட்ட தயாரிப்புகளை உடனடியாக திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாக்கிஸ்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் ஒருங்கிணைக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் மதிப்பீட்டிற்காக பாதிக்கப்பட்ட அனைத்து தொகுதிகளையும் திருப்பி அனுப்ப டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more ; செயற்கைக்கோள் மூலம் இனி இரவிலும் சூரிய ஒளி..!! – கலிபோர்னியா ஸ்டார்ட்அப் ஆராய்ச்சி வெற்றி