நிறத்தையும் மாற்றி விலையையும் உயர்த்திய ஆவின்!… இனி ஆரஞ்சு இல்லை வயலட்!… எவ்வளவு விலை தெரியுமா?
ஆவின் பால் விலை 50 காசுகள் உயர்ந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்தது. 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.210க்கு விற்பனையாகி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி ரூ.10 அதிகரித்து ரூ. 220க்கு விற்பனையானது. ஆவின் பால் விலை உயர்வால் டீக்கடை, உணவகங்கள் பாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பிங்க் நிறத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் ஆவின் நிர்வாகம் மாற்றலாம் எனவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது ஆவின் பால் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன் படி 200ML ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்ந்துள்ளது. அதேபோல வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200ML ஆவின் பால் இன்று முதல் Violet நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் ஆவின் டிலைட் 200 ml பாக்கெட் பால் விற்பனைக்கு வந்துள்ளது. 200ml ஆரஞ்சு நிற பாக்கெட்டாக இருந்தபோது ₹9.50 விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு ரூபாய் 10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென 200ml பால் பாக்கெட்டுக்கு 50 பைசா உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.