For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆதார் மோசடிகள்..!! ’மக்களே யாரும் இப்படி பண்ணாதீங்க’..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

Aadhaar card is the most important identity document for everyone in the country.
11:36 AM Nov 05, 2024 IST | Chella
ஆதார் மோசடிகள்     ’மக்களே யாரும் இப்படி பண்ணாதீங்க’     வெளியான முக்கிய எச்சரிக்கை
Advertisement

நாட்டில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை பல மாற்றங்களை செய்து அவ்வபோது புதுப்பிக்க வேண்டும். தற்போது அனைத்து சேவைகளுக்கும் பயன்படும் ஆதார் கார்டை வைத்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

Advertisement

நம்முடைய ஆதாருடன் மொபைல் எண், வங்கி மற்றும் பான் கார்டு எண்ணை இணைத்து வைத்துள்ளதால் எதிர்பாராத விதமாக உங்களின் ஆதார் கார்டு மோசடி நபர்களிடம் சிக்கினால் வங்கி சார்ந்த விவரங்கள் அனைத்தும் திருடப்படும். அதேபோல், அமைப்பு மற்றும் வங்கியிலிருந்து பேசுவது போல ஆதார் அட்டைதாரர்களை அணுகி ஒரு லிங்கை நாங்கள் அனுப்புவோம் அதனை கிளிக் செய்து உடனே ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதனை நம்பி மக்கள் அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் திருடப்படும்.

இந்நிலையில், எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆதாரை புதுப்பிக்கும் அமைச்சகம் தனிப்பட்ட நபர்களை தொலைபேசி மூலமாக அழைத்து, ஆதார் அமைப்பில் இருந்து போன் செய்வதாக கூறினால், இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும், ஆதாரை புதுப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : நடிகை கஸ்தூரிக்கு எதிராக வெடித்த பஞ்சாயத்து..!! காவல்நிலையத்தில் குவியும் புகார்கள்..!!

Tags :
Advertisement