முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'இனி ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே’..!! 'இதை மறந்துறாதீங்க’..!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!!

Devasthanam has announced that Aadhaar card is now mandatory to buy laddu in Tirupati.
07:52 AM Aug 30, 2024 IST | Chella
Advertisement

திருப்பதியில் லட்டு வாங்க இனி ஆதார் அட்டை கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் தினசரி 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு வேண்டும் என்பவர்கள், ரூ.50 செலுத்தி லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது வரை இந்த நடைமுறையே இருந்து வருகிறது. இருப்பினும், இடைத்தரகர்கள் மூலம் லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான், திருப்பதி தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.

அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், ஆதார் காண்பித்தால் கூடுதலாக ஒரு லட்டு ரூ.50-க்கு வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : நீயெல்லாம் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசலாமா..? என்கிட்ட நிறைய செருப்பு இருக்கு..!! நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு பதிவு..!!

Tags :
ஏழுமலையான்திருப்பதிதிருமலைலட்டு பிரசாதம்
Advertisement
Next Article