’பிறந்த தேதியை உறுதி செய்ய இனி ஆதார் அட்டையை சமர்ப்பிக்க முடியாது’..!! அமலுக்கு வந்தது புதிய விதிமுறை..!!
ஆதார் அட்டைகளை நிர்வகிக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதுவரை பலர் தங்கள் பிறந்த தேதியை சரிபார்க்க ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியைக் காட்டுகிறார்கள். அதைத்தான் ஜெராக்ஸ் எடுக்க கொடுக்கிறார்கள். ஆனால், இனி அப்படி செய்ய முடியாது. பிறந்த தேதிக்கு ஆதார் அட்டையை கொடுக்க முடியாது.
பிறந்த தேதியை உறுதிப்படுத்த ஆதார் செல்லாது என்று தெரிவிக்கும் வகையில், இனி வழங்கப்படும் ஆதார் அட்டைகளில் UIDAI இதை தெளிவாக குறிப்பிட உள்ளது. இந்த புதிய விதி வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி யாராவது ஆதார் அட்டையை எடுத்தால், அதில் பிறந்த தேதியை சரிபார்க்க ஆதார் அட்டை அடையாள அட்டையாக இருக்காது. ஆதார், அடையாளச் சான்றுக்கு மட்டுமே என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பிறந்த தேதியை உறுதிப்படுத்த ஆதார் அட்டையை சமர்பித்து வருகின்றனர். இனி அவ்வாறு செய்ய முடியாது. பிறந்த தேதியை உறுதிப்படுத்த பிறப்புச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்களையே வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.