For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஓட்டலில் எச்சில் துப்பி ரொட்டி தயாரிக்கும் இளைஞர்..!! பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கும் வீடியோ..!!

A video of a young man spitting on the roti being prepared for sale has left viewers in awe.
01:52 PM Sep 09, 2024 IST | Chella
ஓட்டலில் எச்சில் துப்பி ரொட்டி தயாரிக்கும் இளைஞர்     பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கும் வீடியோ
Advertisement

சாப்பிட தயாராகி கொண்டிருக்கும் ரொட்டியில் இளைஞர் ஒருவர் எச்சில் துப்பும் வீடியோ வெளியாகி பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது..

Advertisement

கிரேட்டர் நொய்டாவில் இருந்து வெளியான இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தந்தூரி ரொட்டியைத் தயாரிக்கும் போது அதில் எச்சில் துப்புவது பதிவாகியுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் இந்த வீடியோவை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வருவது இது முதல் முறையல்ல. உணவு தயாரிப்பில் சுகாதாரமற்ற முறைகளைக் காட்டும் இதேபோன்ற வீடியோக்கள் இதற்கு முன்பே வெளிவந்துள்ளன. இது பொதுமக்களின் கோபத்தையும், உணவு பாதுகாப்பு தரநிலைகள் குறித்த கவலைகளை எழுப்பியது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவும் பார்வையாளர்களின் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது.

சிலர், இந்த காரியத்தில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சிலர், பொது உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Read More : உயில் எழுதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உண்டா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement