ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம்.. ஆபாச போட்டோவை காட்டி ரூ.2.5 கோடி..!!
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2017-2022 வரை மனோஜ் குமார் என மாணவன் படித்துள்ளான். அப்போது அதே பள்ளியில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த இளைஞர் அந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி காதல் வலையில் சிக்க வைத்துள்ளான்.
பள்ளியில் படிக்கும்போதே ரிசார்ட், பப், பார்ட்டி, சினிமா, பூங்கா என அழைத்துச் சென்றுள்ளார். அந்த பெண்ணின் வீட்டார் கோடீஸ்வரர்கள் என்பதை அறிந்த கொண்ட அவர், அப்பெண்ணிடமிருந்தே பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி செலவழித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பலமுறை பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
பள்ளி படிப்பை முடித்ததும் அந்த பெண்ணை கோவா, ரிசார்ட், பார்ட்டி என பல நாட்கள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு தெரியாமலே அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துள்ளார். பின்னர், எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று இளைஞர் கேட்ட போது அப்பெண் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நீ பணம் கொடுக்கவில்லை என்றால், உன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனாலும் அப்பெண் பணம் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனையடுத்து நேரடியாக அவரது வீட்டாருக்கு அப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டியுள்ளார்.அப்போது அப்பெண்ணின் வீட்டாரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ,2.5 கோடி பணம் பறித்துள்ளார்.
மேலும், தனக்காக பைக், நகைகள், ரொக்கப் பணம், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றவற்றை பரிசாகப் பெற்றுள்ளார். இதன் பின்னரும் அப்பெண்ணின் காதலை மறுத்து மோசடி செய்து, மீண்டும் பணம் கேட்டுள்ளார். இவரது தொல்லையைத் தாங்க முடியாமல், அப்பெண் பெங்களூரு சிசிபி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Read more ; ஒரே வீட்டில் தங்கிய காதலர்கள், மூன்றாவது மாடியில் செய்த காரியம்..