மனைவியாக வரவேண்டிய பெண் சித்தி கோலத்தில் வந்ததால் அதிர்ந்துபோன இளைஞர்..!! மாமனாருக்கு வந்த விபரீத ஆசை..!!
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில், இங்கு மகனுக்கு பார்த்த பெண்ணை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் சிட்கோ பகுதியில் இளைஞர் ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். அந்த இளைஞர் திருமண வயதை எட்டிய நிலையில், அவரது தந்தை அவருக்கு பெண் பார்த்து வந்துள்ளார். அதில், ஒரு பெண்ணை அவரது மகனுக்கு பிடித்துவிட்டதால், நிச்சயதார்த்தம் முடிந்து, திருமண வேலைகளை தீவிரமாக செய்து வந்துள்ளனர்.
அப்போது மகன் காதல் வயப்பட்ட பெண் மீது தந்தையும் காதல் வயப்பட்டுள்ளார். அந்த பெண்ணும் தனது வருங்கால மாமனார் மீது ஆசை வந்துள்ளது. இதனால், இருவரும் ஊரைவிட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர். தனக்கு மனைவியாக வேண்டிய பெண், சித்தியாக வந்த கோலத்தை கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதை விட்டால் வேறு பெண்ணா இல்லை என அவரது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால், தந்தை மற்றும் வருங்கால மனைவி செய்த துரோகத்தால் வாழ்க்கையை வெறுத்த அந்த இளைஞர், இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன், யாருடனும் சேர மாட்டேன் என சாலையோரத்தில் தனியாக வசித்து வருகிறார். இது போல், சீனாவில் தனது மகன் காதலித்து வந்த பெண்ணை சீன வங்கியின் முன்னாள் தலைவர் லியு லியாங்கே, விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்து கவர்ந்து திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.