For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நேற்று நான்.. இன்னைக்கு அவனா..? கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்..!! இளம் பெண் கொடூர கொலை..

A young girl was stabbed to death by a fake boyfriend near Uthangarai.
01:15 PM Jan 06, 2025 IST | Mari Thangam
நேற்று நான்   இன்னைக்கு அவனா    கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்     இளம் பெண் கொடூர கொலை
Advertisement

ஊத்தங்கரை அருகே, இரவு வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கள்ளக் காதலன் கத்தியால் சரமாரி குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா (27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் மிதுன் சக்கரவரத்தி என்பவருடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் தகாத உறவாக மாறியுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகறாரு ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் பிறிந்து வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே, குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாதேஷ், கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். கணவர் இறந்தபிறகு நிரந்தரமாக தீபா தந்தை வீட்டில் வசித்தார். அப்போது அப்பகுதியில் கிடைக்கும் கூலிவேலைக்கு தீபா சென்று வந்தார். அப்போது உடன் வேளை செய்யும் சூளகிரியை சேர்ந்த கவுதம் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருடனும் நெருங்கிப்பழகி அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இந்த விவரம் மிதுன் சக்கரவர்த்திக்கு தெரிந்ததும் தீபாவிடம் சண்டையிட்டுள்ளார்.

அதன்பின் போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் கம்பெனியில் உள்ள கேண்டீனில் தீபா வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், வேலை முடிந்து தீபா வீட்டிற்கு புறப்பட்டார். சிறிது நேரத்தில் தனத காதலன் கவுதமுக்கு போன் செய்த தீபா, தன்னை 2பேர் பின்தொடர்ந்து வருவதாக பதற்றத்துடன் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின், மீண்டும் கவுதம் போன் செய்த போது, தீபா போனை எடுத்துள்ளார். ஆனால், அவரது அலறல் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுதம், விரைந்து சென்று பார்த்தபோது, கத்திக்குத்து காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே தீபா உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மிதுன் சக்கரவர்த்திதான் தனது நண்பருடன் வந்து தனது காதலியை கொலை செய்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Read more ; இந்தியாவில் பரவியது HMPV வைரஸ்.. பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு பாசிட்டிவ்..!! – ICMR உறுதி

Tags :
Advertisement