For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை உடனே வெளியேற்றும் அற்புத பானம்..!! வெறும் வயிற்றில் குடித்து பாருங்க..!!

All you have to do is remove the waste from your body from time to time. Your weight will decrease and your health will improve.
05:20 AM Jan 05, 2025 IST | Chella
உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை உடனே வெளியேற்றும் அற்புத பானம்     வெறும் வயிற்றில் குடித்து பாருங்க
Advertisement

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும்.

Advertisement

உடல் பருமன்

உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது உடல் எடை கூடுகிறது. உடல் பருமனை நாம் அழகு பிரச்சனையாக மட்டும் பார்க்கக்கூடாது. இது மருத்துவ பிரச்சனையும் கூட. இது பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகளை அதிகரிக்கிறது. இது இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், கல்லீரல் கோளாறுகள், உறக்கப் பிரச்சனைகள் மற்றும் சிலவகை புற்றுநோய்களையும் ஏற்படுத்துகிறது.

சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக இருக்கும். உடல், சூழல், உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொஞ்சம் அளவு எடையைக் குறைத்தாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் ஆகிய யாவும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்து மாத்திரைகளும் இடம் பெறுகின்றன.

ஆனால், இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அவை உங்கள் உடல் எடையை குறைப்பதுடன், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றன. உங்கள் உடலில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நீக்கினாலே போதும். உங்கள் உடல் எடை குறைவதுடன் ஆரோக்கியமும் மேம்படும்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 1 (தோல் நீக்கியது)

எலுமிச்சை சாறு - ஒரு பழத்தின் சாறை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

இஞ்சி - ஒரு இன்ச்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் தோல் நீக்கி நறுக்கிய ஆப்பிள், எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகளை இந்த பானமே அடித்து வெளியேற்றிவிடும். இதனால் உங்கள் உடலில் கழிவுகள் தேங்காமல் வெளியேறி, உடலின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், இது உங்களுக்கு பருகவும் நன்றாக இருக்கும். செய்வதும் எளிது. உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடியது.

Read More : ”இதை செய்தால் உடல் எடை குறையும் என நினைத்து இந்த தவறை செய்யாதீங்க”..!! ”மிகப்பெரிய ஆபத்து”..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Tags :
Advertisement