For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டெல்லியில் புர்கா அணிந்து சொந்த வீட்டிலேயே திருடிய பெண்.! பெற்றோர் தங்கைக்கு செல்லம் கொடுத்ததால் கைவரிசை.!

10:49 AM Feb 05, 2024 IST | 1newsnationuser4
டெல்லியில் புர்கா அணிந்து சொந்த வீட்டிலேயே திருடிய பெண்   பெற்றோர் தங்கைக்கு செல்லம் கொடுத்ததால் கைவரிசை
Advertisement

டெல்லியில் 31 வயதுடைய பெண் ஒருவர் தனது சொந்த வீட்டிலேயே திருட்டை அரங்கேற்றியுள்ளார். அவரது பெற்றோர்கள் தங்கையிடம் அதிக பாசம் காட்டியதால், பொறாமை கொண்டு தங்கையின் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகளை கொள்ளை அடித்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

Advertisement

டெல்லியில் உள்ள உத்தம் நகர் சேவக் பார்க் பகுதியில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி தனது வீட்டில் திருட்டு நடந்திருப்பதாக கமலேஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருட்டுப் போனதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பிரதான கதவும், அலமாரிகளும் உடைக்கப்படாமல் இருந்ததைக் கண்டனர். எனவே அத்துமீறி யாரும் நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதினர். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, புர்கா அணிந்த பெண் ஒருவர் சந்தேகப்படும்படியாக வீட்டிற்குள் நுழைவதைக் கண்டனர்.

காவல்துறையினரின் விசாரணையில் அந்தப் பெண் கமலேஷின் மூத்த மகளான ஸ்வேதா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்வேதா சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது பெற்றோர், தன்னைவிட தனது தங்கையிடம் அதிக பாசத்தை காட்டியதால் பொறாமையும், கோபமும் கொண்டு இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாக ஸ்வேதா காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

ஸ்வேதாவின் நகைகளும் அவரது அம்மாவிடம் இருந்தது. மீதம் உள்ள நகைகள் அவரது தங்கையின் திருமணத்திற்காக வாங்கியது. கொள்ளை திட்டத்தை நிறைவேற்ற, சில நாட்களுக்கு முன்பே ஸ்வேதா தனது தாயின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இளைய மகள் வேலைக்குச் சென்ற பின்பு, கமலேஷ் தனது மூத்த மகளான ஸ்வேதாவின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

இதையறிந்த ஸ்வேதா தனது தாயின் வீட்டு சாவியை எடுத்துக்கொண்டு, காய்கறி வாங்க கடைக்கு செல்வதாக கமலேஷிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு பொது கழிப்பறைக்கு சென்று, புர்கா அணிந்து தனது வீட்டிற்கு சென்று கொள்ளையடித்ததாகத் தெரிவித்தார்.

கொள்ளை சம்பவத்தை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது ஸ்வேதா வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார். அப்பொழுது தன் மீது சந்தேகம் திரும்பாது என்று நினைத்திருந்தார். காவல்துறையினரிடம் பிடிபட்டபோது, தான் திருடிய நகைகளை விற்று விட்டதாக தெரிவித்துள்ளார். எனினும் விற்பனை செய்யப்பட்ட அந்த நகைகளை போலீசார் மீட்டனர். சொந்த மகளே தனது வீட்டில் திருடியதை அறிந்த அந்த குடும்பத்தினர், பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

Tags :
Advertisement