பாலத்தில் இருந்து குதித்த பெண்..!! ஹீரோவான டாக்ஸி டிரைவர்..!! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!
மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் பெண் ஒருவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் டாக்ஸி ஓட்டுநர் பெண்ணின் தலைமுடியை பிடித்து காப்பாற்றிய சம்பவம் அறங்கேறியுள்ளது.. சில நொடிகளில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உயிரைப் பணயம் வைத்து பாலத்தின் தண்டவாளத்தில் ஏறி பெண்ணின் உயிரைக் காப்பாற்றினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளின் கூறுகையில், மும்பையின் முலுண்டில் வசிக்கும் 56 வயது பெண் ரீமா முகேஷ் படேல். அடல் சேது பாலத்தின் நடுப்பகுதியை அடைந்ததும், டிரைவரிடம் காரை நிறுத்தச் கூறியுள்ளார். காரை விட்டு இறங்கிய ரீமா பாலத்தின் தண்டவாளத்தில் ஏறினார். பாலத்தின் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், கட்டுப்பாட்டு அறை உடனடியாக பெண்ணைக் கண்டது.
பெண்ணின் உயிரை காப்பாற்றிய 'சூப்பர் ஹீரோ'
கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் உடனடியாக ரோந்து குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் நான்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீஸ்காரர்கள் அங்கு சென்றவுடன், அந்தப் பெண் கடலில் குதித்தார், ஆனால் வண்டி ஓட்டுநர் வேகமாக ஒரு கையால் தலைமுடியை பிடித்து உயிரைக் காப்பாற்றினார்.
இதையடுத்து, சில நொடிகளில் பாலத்தின் தண்டவாளத்தில் ஏறி, கால்டாக்சி ஓட்டுநரின் உதவியுடன் அந்தப் பெண்ணை போலீஸார் பத்திரமாக மீட்டனர். தற்போது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Read more ; தூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம் இருக்கா? அலட்சியம் வேண்டாம்.. ஆபத்து..!!