For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'ICU-வில் திருமணம்.. மருத்துவ கவச உடையில் மணமக்கள்!!' அனைவரையும் நெகிழ வைத்த அந்த நொடி!! முழு விவரம் இதோ!!

A weird wedding ceremony took place in the intensive care unit (ICU) of a hospital in Lucknow, a video of which is now going viral on social media.
11:34 AM Jun 20, 2024 IST | Mari Thangam
 icu வில் திருமணம்   மருத்துவ கவச உடையில் மணமக்கள்    அனைவரையும் நெகிழ வைத்த அந்த நொடி   முழு விவரம் இதோ
Advertisement

லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஒரு வித்தியாசமான திருமண விழா நடைபெற்றது, அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் முகமது இக்பால். 51 வயதான இவருக்கு 2 மகள்கள் உள்ளன. இரண்டு மகள்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனால், திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், திடீரென சில நாள்களுக்கு முன்பு இக்பாலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிட்டது.

எனவே, அவரது குடும்பத்தார் இக்பாலை லக்னோவில் உள்ள ஈரா மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக ஐசியூவில் சிகிச்சை இக்பாலுக்கு சிகிச்சை ஆரம்பமானது. இக்பால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று டாக்டர்கள் கூறினார்கள்.. உடல்நிலையில் முன்னேற்றம் ஆகும் வரை தொடர்ந்தும் இக்பால் இங்கேயே இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.

எனினும், மகள்களின் கல்யாணத்தை முன்கூட்டியே நடத்தி முடித்துவிடலாம் என்று வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டார் இக்பால். ஆனால், டாக்டர்கள் விடவில்லை.. ஐசியூவில் சிகிச்சை நடந்துவரும்நிலையில், வீட்டுக்கு போவது ஆபத்து என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள். இதனால் மனமுடைந்து போன இக்பால், மகள்களின் கல்யாணத்தை நினைத்து கவலையில் இருந்தார். ஐசியூவில் இருந்துகொண்டு இக்பால் கவலைப்படுவதை பார்த்து குடும்பத்தினரும் மனவேதனையடைந்தனர்.

நோய்வாய்ப்பட்ட தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற மருத்துவமனை நிர்வாகம், ஒரு முடிவுக்கு வந்தது. முறையான பாதுகாப்போடும், மற்ற நோயாளிகளுக்கு தொந்தரவு கொடுக்காமலும் மருத்துவமனையிலேயே அவரின் மகள்களுக்கு திருமணத்தை நடத்த அனுமதி அளித்தனர். மருத்துவமனையின் ஒப்புதலோடு எரா மருத்துவக் கல்லூரியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆதரவுடன் இஸ்லாமிய முறைப்படி ஐசியுவில் திருமணம் நடைபெற்றது.

தீவிர சிகிச்சை பிரிவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இக்பால், மணமக்கள், மருத்துவர்கள், மத குரு ஒருவர் மட்டுமே பங்கேற்றனர். மணமக்கள் மருத்துவ கவச உடை அணிந்திருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இக்பால் பூரணமாக குணமடைய வேண்டும் என்றும், மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்றும் இணையவாசிகள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

Read more ; ரெட் ஒயின் குடிப்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!!

Tags :
Advertisement