முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று முதல் அடுத்த ஒரு வார காலத்திற்கு...! இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

A week from today is being observed as 'Professional Awareness and Skills Week'.
06:56 AM Jul 09, 2024 IST | Vignesh
Advertisement

இன்று முதல் ஒரு வார காலம் "தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக" அனுசரிக்கப்படுகிறது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் இன்றைய இளைஞர்களது வேலைபெறும் திறனை அதிகரிக்கும் விதமாக, பல்வேறு திறன் பயிற்சிகளின் தேவை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் கருதி இளைஞர்களிடையே திறன் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு படிப்பு, பணிவாய்ப்புகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்தும், தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இன்று முதல் 12.07.2024 மற்றும் 15.07.2024 வரை ஒரு வார காலம் "தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக" அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

முதல் நாளான இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும்,இரண்டாம்நாளானஜுலை 10-ம் தேதியன்று மகளிருக்கான தொழில் நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புனர்வு நிகழ்ச்சியும், மூன்றாம் நாளான ஜுலை 11-ம் தேதியன்று பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியும், நான்காம் நாளான ஜூலை 12-ம் தேதியன்று பள்ளி/கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியும், ஐந்தாம் நாளான ஜூலை 15-ம் தேதியன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புனர்வு நிகழ்ச்சியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் www.tnskill.tn.gov.inஎன்ற இணையதளத்தில் திறன் பயிற்சி பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு அந்த இணைய தளத்திலேயே திறன் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
dharmapuriDt collectorjobSkill training
Advertisement
Next Article