முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

1,000 நாட்களை எட்டிய போர்!. அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்ட புதின்!. உலக நாடுகள் பதற்றம்!

A war that reached 1,000 days! Putin ordered to use nuclear weapons! The world is nervous!
08:51 AM Nov 20, 2024 IST | Kokila
Advertisement

Russia - Ukraine War: ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 1,000 நாட்களை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் அளித்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

உக்ரைன் மீது 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. ரஷ்யா மீது உக்ரைனும் அவ்வப்போது டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அணு ஆயுதம் இல்லாத ஒரு நாடு, அந்த பலம் பொருந்திய மற்றொரு நாட்டின் உதவியுடன் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று ரஷ்யா தனது கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 1,000 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ள கொள்கையின்படி, டிரோன் தாக்குதல் நடத்தினால், ரஷ்யா பதிலுக்கு அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்க அளித்த சக்தி வாய்ந்த தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்த அந்நாட்டு அதிபர் பைடன் உக்ரைனுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ரஷ்யா பதிலுக்கு தனது அணு ஆயுத கொள்கையை மாற்றியுள்ளது.

Readmore: இன்று சர்வதேச குழந்தைகள் தினம்!. வித்தியாசமாக கொண்டாடும் நாடுகள்!

Tags :
1000 daysputinRussia and Ukraine Waruse nuclear weapons
Advertisement
Next Article