For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2 நாடுகளுக்கு இடையேயான போர்..!! மற்ற நாடுகளும் தலையீடு..!! மிகப்பெரிய மோதல் இருக்கு..!!

The conflict between the 2 countries is in danger of turning into a world war, a huge conflict.
01:58 PM Aug 06, 2024 IST | Chella
2 நாடுகளுக்கு இடையேயான போர்     மற்ற நாடுகளும் தலையீடு     மிகப்பெரிய மோதல் இருக்கு
Advertisement

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போரில் தற்போது மற்ற நாடுகளும் தலையிடும் வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையே அதிகரித்து வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு ரஷ்ய பாதுகாப்புத் தலைவர் செர்ஜி ஷோய்கு ஈரான் நாட்டு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். ஏற்கனவே, ஈரான் கேட்ட ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நவீன ரேடார்களை மாஸ்கோ வழங்கத் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். ஆனால், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனிஹ் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த ஹமாஸ் அமைப்புதான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக ஹிஸ்புல்லா அமைப்பு இருக்கிறது. அதேபோல், ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் இதேபோல் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவை பெற்று இஸ்ரேலில் போர் செய்து வருகிறது.

இதற்கு பழிவாங்கவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது என்றால் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தும். அதன்படி, அறிவித்தப்படியே ஈரான் தற்போது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் - அமெரிக்க - இஸ்ரேல் இடையிலான போரில் தற்போது மற்ற நாடுகளும் தலையிடும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விவகாரத்தில் தற்போது ரஷ்யா நேரடியாக கருத்து தெரிவித்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்புத் தலைவர் செர்ஜி ஷோய்கு, ஈரானுக்கு ஆதரவாக இருப்போம். ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்வோம். ஈரானுக்கு உறுதுணையாக இருப்போம். தேவையான ஆதரவு நிலைப்பாடுகள், சப்போர்ட்டுகளை வழங்குவோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் வருகை பிரச்சனையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 2 நாடுகளுக்கு இடையே உள்ள மோதல் உலக நாடுகளுக்கு இடையிலான போராக, மிகப்பெரிய மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Read More : விலையுயர்ந்த பொருட்கள்..!! இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற ஆங்கிலேயர்கள்..!! என்ன தெரியுமா..?

Tags :
Advertisement