பிறந்த நாள் விழாவில் கதறி அழும் விஜயகாந்த் மகன்கள்..!! ஆறுதல் சொன்ன நடிகை..!!
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். நடிகராக வளர்ந்து வந்த காலத்திலேயே தனது ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கான நலத் திட்டங்களை செய்து வந்தார். ஏழை மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்ட அவர், தேவையான விஷயங்களுக்கு நிதியுதவி, நன்கொடை அளித்தல், இளைஞர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகள், இலவசத் திருமணங்கள், விளையாட்டு அகாடமி என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார்.
அரசியலில் நுழைந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவர் விஜயகாந்த். அவரது 72வது பிறந்தநாளான இன்று, சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது சிலையை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்தின் மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். காலை முதலே ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய சிலை திறப்பு விழாவில் அவருடைய மகன்கள் கண்கலங்கி அழுத வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவை விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் வெளியிட்டு இருந்த நிலையில் விஜயகாந்தின் மகன்களுக்கு நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் ஆறுதல் சொல்லி கமெண்ட் போட்டு இருக்கிறார். அந்த பதிவில் "Sending you and your family strength" என்று ஆறுதலாக கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதுபோல பல பிரபலங்களும் ரசிகர்களும் விஜயகாந்தின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
அதோடு விஜயகாந்தின் சிலை திறப்பு விழாவில் கண்கலங்கி அழுத அவருடைய மகன்களில் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சில நிமிடங்களில் திடீரென மயக்கம் போட்டு விட அவர் மருத்துவமனைக்கு அவர்களுடைய காரில் கொண்டு சென்றதும் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read more ; தவெக-வின் அடுத்த மூவ் என்ன? விஜய் கட்சியின் பலம் குறித்து ஸ்டாலினுக்கு போகும் சர்வே..!!