'இணையத்தில் ட்ரெண்டாகும் அஜித்தின் கார் ரேஸ் வீடியோ!!' விலை இத்தனை கோடியா? சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு மிகவும் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். 90 களில் தொடங்கி தற்போது வரை இவருக்கான ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டேதான் இருக்கிறார்களே தவிர குறையவில்லை. தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார் அஜித்.
நடிகர் அஜித் கார், பைக்குகளை அதிகம் விரும்பும் நபர் என்று நமக்கு தெரியும். இவர் பல்வேறு கார்பந்தயப் போட்டிகளில் கூட பங்கேற்றுள்ளார். சமீபத்தில் இவர் துபாய் சென்று அங்கு ரேஸ் டிராக்கில் பிஎம்டபிள்யூ எம் 4 காம்படிஷன் என்ற காரை ஓட்டி சோதனை செய்துள்ளார். அப்பொழுது அதிகபட்ச வேகத்தில் இவர் வாகனத்தை ஓட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
குறிப்பிட்ட இந்த வீடியோவில் நடிகர் அஜித் ஓட்டியது துபாயில் விற்பனையாகி வரும் எம் 4 காம்படிஷன் காராகும். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் 4 காம்படிஷன் என்ற காரை இவர் ரேஸ் டிராக்கில் ஓட்டி பார்த்துள்ளார். இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 2993 சிசி இன்ஜின் கொண்டதாக இருக்கிறது. இது 503 பிஎச்பி பவரையும் 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது.
இந்த கார் லிட்டருக்கு 9.7 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரியல் வேல்டில் 8 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 1.53 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.
இந்த கார் அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட காராகவும், அதே நேரம் ஹேண்டில் செய்வதற்கு சிறப்பான காராகவும், சிறப்பான பவர் அவுட்புட் தரும் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை இது ஒரு கூபே ஸ்டைல் காராக இருக்கிறது.
இந்த காரை நடிகர் அஜித் துபாயில் உள்ள ரேஸ் டிராக்கில் ஒட்டி சென்றார். அப்பொழுது அவர் பாதுகாப்பிற்காக கார்க்குள் ஹெல்மெட் அணிந்து மிக வேகமாக காரை ஓட்டினார். இந்த வீடியோவில் பதிவான காட்சிகளின் படி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் கார் 146 மைல் வேகத்தில் பயணிப்பதாக காட்டுகிறது. துபாயில் உள்ள கார்கள் பெரும்பாலும் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு மைல் என்ற கணக்கை தான் காட்டும்.
இந்த காரின் அதிகபட்ச வேகமே 250 கிலோ மீட்டர் வேகம்தான் கிட்டத்தட்ட உச்சபட்ச வேகத்தில் நடிகர் அஜித்குமார் இந்த காரில் பயணம் செய்துள்ளது நமக்கு தெரிகிறது. இந்த வேகத்தில் சாலையில் பயணிக்க தடை இருக்கிறது இருந்தாலும் ரேஸ் டிராக்கில் இந்த தடை இல்லாததால் இந்த பயணத்தை அவர் பாதுகாப்புடன் செய்துள்ளார்.
Read more ; Kallakurichi | “இதற்கெல்லாம் சிபிஐ விசாரணையே தேவையில்லை”..!! அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி..!!