முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களை காலுக்கு மசாஜ் செய்ய வைத்த அரசுப்பள்ளி ஆசிரியை… வைரலான வீடியோவால் பெற்றோர் அதிர்ச்சி..!!

A video of a teacher massaging students at a government school in Jaipur is going viral on the internet.
01:12 PM Oct 11, 2024 IST | Mari Thangam
Advertisement

மாதா பிதா குரு தெய்வம் என்று கூறுவார்கள். ஆசிரியர் என்றால் தெய்வத்திற்கு முன்னால் என்று சிறுவயதில் இருந்தே நமக்கு கற்றுக் கொடுத்து வளர்ப்பார்கள்.‌ காரணம் நாம் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும் அதற்கு ஆசிரியர்களே முழுமுதற் காரணமாக இருப்பார்கள். அவ்வளவு மதிப்பு மிக்க ஒரு பணியை செய்யும் ஆசிரியர் ஒருவரே சிறுவன் என்றும் பாராமல் மாணவரை தன் கைகளுக்கு மசாஜ் செய்ய சொன்னது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Advertisement

அரசு பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், ஜெய்ப்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவர்களை மசாஜ் செய்ய பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகிறது. அந்த வீடியோவில், அரசு பள்ளி வகுப்பறை ஒன்றில் ஆசிரியை ஒருவர் தரையில் படுத்துக்கொண்டிருக்கிறார். அவரின் அருகில் சில மாணவர்கள் நின்றுக்கொண்டு, மசாஜ் செய்வது போல் ஆசிரியையின் கால்கள் மீது ஏறி நின்றுக்கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியையின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல கனவுகளுடன் பள்ளிக்கு படிக்க அனுப்பப்படும் மாணவர்கள் இவ்வாறு ஆசிரியர்கள் தங்களது சொந்த தேவைகளுக்கான பயன்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் மற்றும் பொருளாதார சூழல்களால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குறைந்த செலவில் அரசு பள்ளிகளில் படிக்க வைக்கும் நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் அதை தவறாக பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. இது குறித்து அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுகிறது.

Read more ; ரத்தன் டாடாவுக்கு சிகிச்சை அளித்த கோவை வைத்தியர்.. நினைவுகளை பகிர்ந்து உருக்கம்..!!

Tags :
government schooljaipurStudents massage teachersviral on the internet
Advertisement
Next Article