முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு...! ஜூலை 24 & 25 ஆகிய தேதிகளில் பயிற்சி முகாம்...!

A two-day training camp for History Department teachers is going to be held at Chennai Government Museum.
06:15 AM Jul 17, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வரலாற்று துறை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

நமது முன்னோர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை அரும் பொருட்கள் மூலமாக வளரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் அரிய பணியினை சென்னை அரசு அருங்காட்சியகம் கடந்த 170 ஆண்டுகளாக நிகழ்த்தி வருகின்றது. நமது பெருமைமிக்க கலை மற்றும் தொல்லியல் தொடர்பான வரலாற்றினை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் வரலாற்று துறை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஜூலை 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் "நமது கலை மற்றும் தொல்லியல் அறிவோம்" என்கிற தலைப்பில் பயிலரங்கம் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அருங்காட்சியக கலையரங்கத்தில் நடைபெறுகிறது.

பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து கலந்து கொள்ளும் கல்வியாளர்களுக்கு நமது கலை மற்றும் தொல்லியல் பற்றிய விரிவான புரிதலை ஏற்படுத்துவதே இப்பயிலரங்கத்தின் நோக்கமாகும். இப்பயிலரங்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் வரலாற்றுத் துறையில் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். இரண்டு நாள் நிகழ்விலும் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

Tags :
campChennaiEdu departmenttn government
Advertisement
Next Article