சற்று முன் வெளியான அறிவிப்பு...! மொத்தம் 8 மாவட்டத்தில் இன்று விடுமுறை...! முழு விவரம்...
தொடர் கனமழை காரணமாக தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 4 மாவட்டங்களிலும் இன்று காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, ராமநாதபுரம், விருதுநகர், கொடைக்கானல் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதிகாரிகள் நியமனம்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும். உடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.