பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 29,057 பேர் பயன்...!
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-22 முதல் 2023-24 வரை) பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 29057 பேர் பயனடைந்துள்ளனர்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்துடன் இணைந்து, தூய்மை இந்தியா இயக்க (ஊரகம்) நிதியிலிருந்து தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வீட்டில் கழிப்பறை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகளின் காரணமாகவே, சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய அளவிலும், மாநில அளவிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு தகவல், கல்வி மற்றும் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தேசிய அளவில் தொலைக்காட்சி, வானொலி மூலம் இது குறித்த அறிவிப்புகள் செயல்படுகின்றன. தூய்மை இந்தியா இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக பிரபலங்கள் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) தனது முதன்மைத் திட்டமான பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை 2015 முதல் செயல்படுத்தி வருகிறது. இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய வேலைவாய்ப்பு மூலம் சிறந்த வாழ்வாதாரத்திற்காக தொழிற்சாலைக்கு ஏற்ற திறன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ், குறுகிய கால பயிற்சி மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியும், முந்தையக் கற்றலை அங்கீகரித்தல் மூலம் திறனை மேம்படுத்துதல் மற்றும் மறுதிறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்புகள் குறுகிய கால பயிற்சி கூறுகளில் இத்திட்டத்தின் முதல் மூன்று பதிப்புகளில் கண்காணிக்கப்பட்டன. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-22 முதல் 2023-24 வரை) பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 29057 பேர் மாவட்ட வாரியான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.