For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோர விபத்து..! பறிபோன 12 உயிர்கள்!! நடந்தது என்ன?

12 pilgrims died when a tourist van overturned on Rishikesh-Badrinath road near Uttarakhand.
03:08 PM Jun 15, 2024 IST | Mari Thangam
கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோர விபத்து    பறிபோன 12 உயிர்கள்   நடந்தது என்ன
Advertisement

உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் அருகே 17க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அலகனந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராவலரில் சுமார் 17 பயணிகள் இருந்த நிலையில், வேனில் பயணித்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.  வாகனம் பள்ளத்தில் உருண்டு வந்த போது வாகனத்தில் இடுபாடுகளில் சிக்கி அவர்கள் உயிரிழந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, “காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். காய மடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்“ என்றார்.

Tags :
Advertisement