For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கியான்வாபி மசூதி இருந்த இடத்தில் கோயிலா...? உச்ச நீதிமன்றத்தில் எங்க வாதத்தை முன்வைப்போம்...!

11:44 AM Jan 28, 2024 IST | 1newsnationuser2
கியான்வாபி மசூதி இருந்த இடத்தில் கோயிலா     உச்ச நீதிமன்றத்தில் எங்க வாதத்தை முன்வைப்போம்
Advertisement

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் கியான்வாபி மசூதி உள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் இருந்த கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர்கள் மசூதி கட்டியதாக புகார் எழுந்தது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 ஹிந்து பெண்கள் வழக்கு தொடுத்தனர்.

Advertisement

இந்த வழக்கில், மசூதிக்குள் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கள ஆய்வு நடத்த வேண்டும். அங்கு கோயில் மீது மசூதி கட்டப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று வாராணசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தின. அதன் அடிப்படையில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்தி 839 பக்க ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சமர்ப்பித்தது. கியான்வாபி மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் மசூதி குழு செயலாளர் முகமது யாசின் கூறுகையில்; இந்திய தொல்லியல் துறை சமர்ப்பித்திருப்பது ஒரு அறிக்கைதான். இது தீர்ப்பு அல்ல. இது தொடர்பாக பல்வேறு அறிக்கைகள் இருக்கலாம். இந்த விவகாரத்தில் அவையெல்லாம் இறுதியானதாக இருக்க முடியாது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால், வழிபாட்டுத் தலங்களின் சிறப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம் என்றார்.

Tags :
Advertisement