For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விபத்தில் 2 கால்களையும் செயலிழந்த வாலிபர்..!! சோஷியல் மீடியா தகவலை பார்த்து வீட்டிற்கே சென்று உதவிய நகர்மன்ற தலைவர்..!!

The teenager, who lost both his legs in the accident, asked for help on social media. After seeing this information, Krishnagiri Municipal Chairman Parida Nawab went home and helped him.
05:33 PM May 24, 2024 IST | Chella
விபத்தில் 2 கால்களையும் செயலிழந்த வாலிபர்     சோஷியல் மீடியா தகவலை பார்த்து வீட்டிற்கே சென்று உதவிய நகர்மன்ற தலைவர்
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை குப்பம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் முஹம்மத் (34). சமீபத்தில், ஏற்பட்ட வாகன விபத்தில், இரண்டு கால்களும் செயலிழந்து, அவருடைய முதுகுப் பகுதியில் அடிபட்டு எலும்பு வெளியேத் தெரியக் கூடிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, முஹம்மத்தின் சிகிச்சைக்கு மருத்துவ உதவி தேவை என அவரது உறவினர் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

Advertisement

மேலும், புளி நசுக்கும் கூலி வேலை செய்து வரும் அவரது மனைவி, தினசரி வருமானத்தில் கணவரையும், வாடகைக்கூட செலுத்த முடியாத நிலையில் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த தகவலை அறிந்த கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப், நேற்றைய தினம் (மே 23) முஹம்மத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

பின்னர், மருத்துவ உதவிக்கு ரூ.25,000 வழங்கினார். மேலும், பிற உதவிகளை செய்யத் தயார் என்றும் உறுதியளித்தார். சமூக வலைதளத்தில் உதவி கேட்டு வந்த தகவல் அறிந்து வீடு தேடிச் சென்று உதவி செய்த பரிதா நவாப்க்கு முஹம்மத்துவின் குடும்ப உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

Read More : மக்களே..!! இனி தான் ஆட்டமே இருக்கு..!! வரிசையாக வரப்போகும் புயல்கள்..!! நிபுணர்கள் எச்சரிக்கை..!!

Tags :
Advertisement