முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்தடுத்து திடீர் நிலச்சரிவு!… பூமிக்குள் புதைந்த வீடுகள், சாலைகள், மின்கம்பங்கள்!… பீதியில் மக்கள்!

05:35 AM Apr 28, 2024 IST | Kokila
Advertisement

Landslide: காஷ்மீர் ரம்பன் மாவட்டத்தின் பெர்னோட் கிராமத்தில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள், சாலைகள், மின்கம்பங்கள் பூமிக்குள் புதைந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தின் பெர்னோட் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று இரவில் திடீரென ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள் எல்லாம் சேதம் அடைந்துள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மின்சார கம்பங்கள் விழுந்து மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலச்சரிவால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதியின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நிலச்சரிவை தொடர்ந்து உடனடியாக கிராமத்திலிருந்த மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். மேலும் இந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் கடும் சேதமடைந்ததற்கான காரணத்தை கண்டறிய புவியியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ரம்பன் மாவட்ட துணை ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்னும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் சூழல் நிலவி கொண்டிருக்கிறது. சாலை மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை மீட்டெடுப்பதில் மாவட்ட நிர்வாகம் முன்னுரிமையாக கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறோம் என்றும், மீட்பு முகாம்களில் இருக்கும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Readmore: தண்ணீர் பஞ்சந்தை சந்திக்கும் தென்னிந்தியா!… நீர்த்தேக்கங்களின் அளவு 17% ஆக குறைந்ததால் கவலை!

Advertisement
Next Article