கள்ளக்காதலியின் மகளுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை..!! பெற்ற தாயே உடைந்தையாக இருந்ததால் மனமுடைந்த மாணவி..!!
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி அலுவலக கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக டிஜிபி அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வருபவர் பாக்யராஜ். அதே அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் பாக்யராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
அந்த பெண் ஊழியர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இதையடுத்து, பாக்யராஜ் அந்த பெண் ஊழியரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பெண் ஊழியரின் வீட்டிற்கு வந்த பாக்யராஜ், அவர்களது மகள்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்துள்ளார்.
பிறகு அங்கு இருந்த அந்த பெண் ஊழியரின் 21 வயது மகளுக்கு (கல்லூரி மாணவி) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி, பாக்யராஜ் கன்னத்தில் அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளார். இது குறித்து தாயாரிடம் மகள் நடந்ததை கூறியுள்ளார். ஆனால், தாயாரோ பாக்யராஜிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
இதனால், மனமுடைந்து போன மாணவி, எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், எழும்பூர் மகளிர் போலீசார் பாக்யராஜ் மற்றும் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல், பெண்ணை தாக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : திருமணம் செய்வதாக கூறி மோசம் செய்த பிரபல துணை நடிகர் சுகுமார்..!! போலீசில் பரபரப்பு புகாரளித்த நடிகை..!!