முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

16 வயது நர்சிங் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்..!! பண்ருட்டியில் அதிர்ச்சி..!!

10:21 AM Dec 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அன்னங்காரன் குப்பத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகன் வாஞ்சிநாதன் (20). இவர் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், பேர்பெரியான்குப்பம் ராஜன் நகரைச் சேர்ந்த 16 வயது நர்சிங் மாணவியை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

Advertisement

அதன் விளைவாக மாணவி தற்போது கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அவரது பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாஞ்சிநாதனை தேடி வருகின்றனர். சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன், தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
கடலூர் மாவட்டம்கல்லூரி மாணவிபண்ருட்டி
Advertisement
Next Article