முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இப்படி ஒரு விநோத கிராமமா..? எப்படித்தான் மக்கள் வாழ்கிறார்கள்..? சுவாரஸ்ய தகவல்..!!

There is a village in the world where there is no rain. The villagers have been suffering for many years without rain. We are going to see about that village in this post.
03:59 PM Jul 18, 2024 IST | Chella
Advertisement

நிலத்தில் இருந்து நீர் ஆவியாகி பூமியின் வளிமண்டலத்தில் குளிர்ந்து மேகங்களை உருவாக்குகிறது. இந்த மேகங்கள் போதுமான அளவு கனமாக இருக்கும்போது, ​​​​குளிர்காற்று படும்போது அவை மழை வடிவத்தில் பூமியில் விழுகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழையைப் பெறுகின்றன. ஆனால், மழையே பெய்யாத இடம் ஒன்று இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுதா..? ஆம், உண்மை தான். உலகில் மழையே பெய்யாத ஒரு கிராமம் உள்ளது. பல ஆண்டுகளாக மழையின்றி அந்த கிராம மக்கள் தவித்து வருகின்றனர். அந்த கிராமத்தை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Advertisement

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் தான் அல்-ஹுதீப் என்ற இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமம் தரை மட்டத்தில் இருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது. இந்த கிராமம் உயரமாக இருந்தாலும் இந்த இடம் வறட்சியுடன் தான் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வருடத்தின் வெவ்வேறு நேரங்களில் மழை பெய்கிறது. ஆனால், அல் ஹுதைபே கிராமம் எப்போதும் வறண்டு தான் கிடக்கிறது. இங்கு எப்போதும் மழை பெய்யாததால், வானிலை மிகவும் வறண்டு காணப்படும். பகலில் அதிகப்படியான வெப்பமும் இரவில் உறைபனி குளிரும் நிலவுகிறது. மீண்டும் காலை சூரியன் உதிக்கும்போது வானிலை வெப்பமடைகிறது.

ஆனால், இந்த கிராமத்தில் ஏன் மழை பெய்வதில்லை என்ற கேள்வி எழும். அதற்கு காரணம், ஏமனின் இந்த பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும் மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளது தான் காரணம். அதன் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன. அல் ஹுதைப் கிராமத்தின் இடம் சமவெளியில் இருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ளது. சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000 மீட்டருக்குள் குவியும். எனவே, அல்-ஹுதைபின் மீது மேகங்கள் குவிவதில்லை. மேலும், மேகங்கள் இல்லாவிட்டால் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதனால் தான் இங்கு மழைக்கான வாய்ப்பே இல்லை.

Read More : பட்டா மாற்றம்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!! மக்களே இனி கவலை வேண்டாம்..!!

Tags :
villageஅல்-ஹுதீப் கிராமம்ஏமன் நாடுமழை
Advertisement
Next Article