முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புயலாவது..? மழையாவது..? சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை..!!

02:29 PM Dec 12, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மக்கள் தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், புயலின்போது கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கினாலும், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தனர். இதையடுத்து, அவர்களை பாராட்டும் வகையில் பேரிடர் பணியில் சிறப்பாக செயல்பட்ட 3,429 பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

முன்னதாக சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரியாணி விருந்து அளித்து கவுரவித்தார். சமூக வலைதளங்களிலும் தூய்மை பணியார்கள் பாரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
சென்னைதமிழ்நாடுதூய்மை பணியாளர்கள்மிக்ஜாம் புயல்முதல்வர்
Advertisement
Next Article