வங்கக் கடலில் நாளை உருவாகிறது புயல்..!! சென்னையில் கரையை கடக்கிறதா..? இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்..!!
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டாவை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களில் சென்னை அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
Read More : EPFO பயனர்களே..!! இப்படி கூட UAN-ஐ ஆக்டிவேட் செய்யலாமா..? ஆதார் கார்டு இருந்தால் போதும்..!!