சற்றுமுன்...! சென்னை தங்கக் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்...! விசாரணையில் அதிர்ச்சி தகவல்...!
சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப் பொருள் கடை மூலம் நடந்த 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து இந்தக் கடத்தல் நடப்பதாகவும் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 10 லட்சம் முதலீடு செய்து அனுமதியுடன் தொடங்கி நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடையில் பணியாற்றும் 7 பேருக்கும் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான பிசிஏஎஸ் பாஸ் முறையான காவல்துறையின் தடையில்லா சான்று போன்றவை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலைய அதிகாரி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சர்வதேச விமானங்கள் செல்லும் பகுதியில் பரிசுப் பொருள் கடை திறக்க பாஜக பிரமுகர் பிருத்வி உதவியதாக சபீர் அலி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சபீர் அலி வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பாஜக பிரமுகர் பிருத்வி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகள், அரசியல் புள்ளிகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான சென்னையைச் சேர்ந்த சபீர் அலிக்கு விமான நிலைய அதிகாரிகள் சிலரே உதவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.