For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொலீஜியம் அமைப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க தனி அமர்வு!… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல்!

08:36 AM Jan 09, 2024 IST | 1newsnationuser3
கொலீஜியம் அமைப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க தனி அமர்வு … உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல்
Advertisement

நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் அமைக்கு எதிரான மனுக்களை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், தேசிய நீதிபதி நியமன ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.இந்த சட்டம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி, அதனை கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பிறகு, நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசு தரப்பில் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலீஜியம் அனுப்பும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பதையும் தாமதம் செய்துவருகிறது. இந்த தாமதத்திற்கு உச்சநீதிமன்றம் தரப்பில் தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலீஜியம் நடைமுறையே சிறந்த நடைமுறை என்றும் உச்சநீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டி வருகிறது.

இந்நிலையில், இந்த கொலீஜியம் நடைமுறைக்கு எதிராக வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கவுல், கொலீஜியம் நடைமுறை தொடர்பாக கடந்த டிசம்பர் 29ம் தேதி பேட்டியளித்திருந்தார். அதில், மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதிபதி நியமன ஆணையம் செயல்பட ஒருவாய்ப்பு கூட அளிக்கப்படாததே, நீதிபதிகளை நீதிபதிகளே நியமன செய்யும் நடைமுறைக்கு எதிரான சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

கொலீஜியம் நடைமுறையில் பிரச்சனை உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஏராளமான பரிந்துரைகள் நிலுவை வைக்கப்பட்டுள்ளநிலையில், கொலீஜியம் சுமுகமாக செயல்படுகிறது என்று கூறுவது யதார்த்தமற்றது. எனவே, கொலீஜியத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வு காணப்படவேண்டும். அதன்பிறகே, இந்த விவகாரத்தில் நாம் ஒரு தீர்வுக்கு வரமுடியும் என்றார்.

நீதிபதி எஸ்.கே.கவுலின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி, தனது மனுவை அவசர வழக்காக பட்டியலிட வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடிதம் சமர்பிக்கப்பட்டது. இந்த கடிதத்தை பரிசீலித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், கொலீஜியம் நடைமுறைக்கு எதிரான மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று கூறினார்.

Tags :
Advertisement