பாலியல் புகாரால் பற்றி எரியும் கேரள சினிமா..!! - முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு செக்!! புகார் அளிக்க உதவி எண் அறிவிப்பு..!!
மலையாள திரைத் துறையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க சிறப்பு உதவி எண் மற்றும் ஈமெயில் முகவரி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கைக்கு பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பாலியல் தொல்லைகள் நடைபெற்றதாக பேசிவருகின்றனர். முன்னணி திரைக் கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைத்துறை பற்றி எரிகிறது.
சமீபத்தில் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அதனைத்தொடர்ந்து, தமிழ் திரைத்துறையில் பலரும் அறிந்த நடிகரான ரியாஸ் கான் மீது கேரளாவை சேர்ந்த நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை கேரள சினிமாவில் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பிய நிலையில், கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாளத் திரைத் நடிகைகள் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது என்ற தகவல் தான் வெளியாகி இருக்கிறது, யார் யார் அளித்தார்கள்? யார் யார் புகார் கொடுத்தார்கள்? என்ற விவரம் இல்லை.
எனவே ஹேமா கமிட்டி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர்களின் பெயர்களை உடனடியாக வெளியிட வேண்டும் என கேரளா திரைப்பட தொழிலாளர் சங்கமான 'பெஃக்கா' முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கட்சியின் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நெருக்கடி அதிகரித்து இருக்கிறது.
இதற்கிடையே மலையாள திரைத் துறையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க சிறப்பு உதவி எண் மற்றும் ஈமெயில் முகவரி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. 0471-2330747 என்ற தொலைபேசி எண்ணிலும், digtvmrange.pol@kerala.gov.in என்ற ஈ-மெயில் முகவரியிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; இன்னும் 7 நாட்கள் தான்.. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!! – மம்தா அதிரடி