திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்... வரும் 21-ம் தேதி சிறப்பு முகாம்...!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தை அளித்து, அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் "தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்" 2008-ல் அமைக்கப்பட்டது.
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக, இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடர்புத் துறைகளும் ஒருங்கிணைந்து முகாம் நடைபெறும் நாளில் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு இம்முகாம்கள் மூலம் திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடை வகை உறுதி செய்திட வேண்டும்.
மேலும், சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 21.06.2024 அன்று நடைபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.