முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமெரிக்காவில் விமானம் மோதி விபத்து.! மீட்பு பணிகளில் தீவிரம்.!

04:48 PM Feb 02, 2024 IST | 1newsnationuser4
Advertisement

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள ட்ரெய்லர் பார்க்கில், சிறிய வகை விமானம் ஒன்று விழுந்து மோதியது. பெரும் தீ விபத்தை உண்டாக்கிய இந்த சம்பவம், பல உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

Advertisement

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ட்ரெய்லர் பூங்காவில், இந்த வியாழக்கிழமை அன்று சிறிய வகை விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியது. சிங்கிள்-இன்ஜின் பீச்கிராஃப்ட் பொனான்சா வி35, என்று அறியப்பட்ட இந்த விமானம் க்ளியர் வாட்டர் மாலுக்கு தெற்கே உள்ள மொபைல் ஹோம் பார்க்கில் விழுந்தது. இதனால் அங்கிருந்த வீடுகளுக்கு தீ பரவியது.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி, இந்த விமானம் விழுவதற்கு முன்பு பைலட் 'மே தினத்தை' அறிவித்ததாக கூறினார். இது அவசர நிலையை குறிக்கும் சமிக்ஞை வார்த்தையாகும். விமானத்தில் எத்தனை நபர்கள் பயணித்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. விமானத்தில் இருந்தவர்களும், மொபைல் பார்க்கில் இருந்த வீட்டினரும் இந்த விபத்தில் இறந்திருக்க கூடும் என்று தீயணைப்புத் துறையும், மீட்புத் துறையும் தெரிவித்துள்ளது.

விபத்து குறித்த வீடியோவை தங்களது X தளத்தில் தீயணைப்புத் துறை பகிர்ந்துள்ளது. விமானத்தின் இன்ஜின் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பைலட் சம்பவ இடத்திலேயே இறந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து FAA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விசாரணை துவங்கும் என்றும் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

Tags :
AmericaDisasterflight crashFloridapilot
Advertisement
Next Article