நடுவானில் பயங்கரம் ; கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம்..! பயணி ஒருவர் பலி
லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற சிங்கப்பூர் எயர்லைன்ஸ்விமானம் நடுவானில் கடுமையாக குலுங்கியதில் பயணியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் மேகக்கூட்டத்தில் மோதியதன் காரணமாக நடுவானில் விமானம் குலுங்கியது. இதன் காரணமாக பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பான தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த விபத்து காரணமாக விமானம் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் #SQ321, 20 மே 2024 அன்று லண்டனிலிருந்து (ஹீத்ரோ) சிங்கப்பூருக்குச் சென்றது, வழியில் கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்டது. விமானம் பாங்காக்கிற்குத் திருப்பிவிடப்பட்டு 21 மே 2024 அன்று உள்ளூர் நேரப்படி 15:45 மணிநேரத்திற்கு தரையிறங்கியது" என்று ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
கடைசியாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இறப்புகள் அக்டோபர் 2000 இல் தைவானில் புறப்படும் போது மூடப்பட்ட ஓடுபாதையில் விமானம் விழுந்து 83 பேர் உயிரிழந்தனர். ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க்கின் பதிவுகளின்படி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 7 விபத்துகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More ; Heart Attack | ஒருசில நிமிட கோபத்தால் கூட மாரடைப்பு வரும்..!! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்..!!