For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை டக்குன்னு அதிகரிக்க, சிம்பிளா ஒரு ஜூஸ் ஷாட்ஸ்.! .!

05:50 AM Nov 25, 2023 IST | 1newsnationuser4
நோய் எதிர்ப்பு சக்தியை டக்குன்னு அதிகரிக்க  சிம்பிளா ஒரு ஜூஸ் ஷாட்ஸ்
Advertisement

குளிர்காலத்தில் அடிக்கடி சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எளிமையான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement

இதற்கு ஒரு ஆரஞ்சு பழம், சிறிது மஞ்சள் சிறிய அளவில் இஞ்சி, பாதி எலுமிச்சை பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலை நீக்கி விட்டு நீக்கிய தோலை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் தோலை நீக்கி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் இஞ்சி மற்றும் மஞ்சளை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிக்சஸி ஜாரில் மற்றும் மஞ்சள் தூண்டுதல் ஆரஞ்சு பழம் மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இது நன்றாக அரைந்ததும் இந்தக் கலவையுடன் கொதிக்க வைத்த ஆரஞ்சு பழ தோளின் சாறை சேர்க்க வேண்டும்.

இவற்றை வடிகட்டி ஒரு கிளாஸில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மிளகு பொடி சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலையும் கொடுக்கிறது.

Tags :
Advertisement