For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த போருக்கான அறிகுறி!… சிரியாவில் அமெரிக்கா ராணுவ தளத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்!

07:57 AM Apr 22, 2024 IST | Kokila
அடுத்த போருக்கான அறிகுறி … சிரியாவில் அமெரிக்கா ராணுவ தளத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்
Advertisement

Syria: ஈராக்கின் ஜும்மரில் இருந்து வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அடுத்த போருக்கான அறிகுறியா என்ற அச்சம் எழுந்துள்ளது.

Advertisement

முன்னதாக சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் முன்னெடுத்துள்ள சம்பவம் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியது. துணைத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. ஆனால் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜோர்தான் நாடுகளால் அவை முறியடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் அடுத்த போருக்கன அறிகுறியாக பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க மறுத்ததை அடுத்து இஸ்ரேல் பதிலடி அளிப்பதை கைவிட்டுள்ளதாக கூறுப்படுகிறது. இந்தநிலையில், ஈராக்கின் ஜும்மரில் இருந்து வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து 5 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவு குழுக்கள் அமெரிக்க துருப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தியுள்ள நிலையில், அமெரிக்கப் படைகளுக்கு எதிரான இந்த தாக்குதல் முதல் முறையாகும். மட்டுமின்றி, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி அமெரிக்காவிற்கு பயணம் செய்து அதிபர் ஜோ பைடனை சந்தித்து விட்டு நாடு திரும்பிய அதே நாளில் தாக்குதல் நடத்தப்பட்டுதால் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஒரு சிறிய டிரக்கின் பின்புறத்தில் பொருத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் சிரியாவுடனான ஜும்மர் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் போர் விமானங்கள் வானில் பறந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சுடப்படாத ராக்கெட்டுகள் வெடித்ததில் டிரக் தீப்பிடித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாங்கள் விசாரிக்கும்வரை, டிரக் அமெரிக்க போர் விமானங்களால் குண்டு வீசப்பட்டதா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது என்றும் தப்பியோடியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் ராணுவ அதிகாரி கூறினார்.

Readmore: பிஃஎப் ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இனி உங்கள் கைக்கு ரூ.1,00,000 கிடைக்கும்..!!

Advertisement